நடிகர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே பைனான்ஸ் சம்மந்தமாக பிரச்சனை எழுந்துள்ளது.
பசங்க படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சய்மானவர் விமல். அதன் பின்னர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல். இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.
விமலின் வெற்றிப்படங்கள்…
களவாணி படத்துக்குப் பிறகு மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகர்ம், தேசிங்கு ராஜா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். அதைபோலவே நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்ட உதவியது.
தயாரிப்பில் இறங்கிய விமல்….
இதையடுத்து சமீபத்தில் விமல் மன்னார்வகையறா என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தார். இந்த படம் கணேசன் என்பவரால் தொடங்கப்பட்டு ஆனால் அவரால் தொடரமுடியாத காரணத்தால் விமல் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக விமல் சிங்காரவேலன் மூலமாக கோபி என்பவரிடம் 5 கோடி ரூபாய் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது. அது சம்மந்தமாக கோபி ஒரு மோசடி வழக்கை விமல் மேல் பதிவு செய்துள்ளார். மேலும் களவாணி 2 படத்தைத் தானே தயாரிக்கப் போவதாகவும் சொல்லி சிங்கார வேலனிடம் 1.5 கோடி ரூபாய் முன்பணமாக பெற்றுக்கொண்டு அதையும் திருப்பித் தரவில்லை எனக் குற்றச்சாட்டை வைத்தார்.
விமலின் பரபரப்பு ஆடியோ…
இந்நிலையில் கடனை இந்த ஆண்டுக்குள் திருப்பித் தருவதாக சிங்காரவேலனுக்கு விமல் அனுப்பிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில் “ வணக்கம் அண்ணே… சிங்காரவேலன் அண்ணனுக்கும், கோபி சாருக்கும் வணக்கம். என்ன மெருகேத்தி, மேன்மை படுத்துன உங்களுக்கு நன்றி. இந்த அவமானங்கள் தலைகுணிதல்களால மன உளைச்சல வெம்பி போய் கிடந்தேன். ஆனால் இப்போ பாஸிட்டி எனரஜி வந்து இதெல்லாம் ஒரு சவால எடுத்துகிட்டு ஓடணும்னு தோணுது. இந்த வருஷத்துக்குள்ள ஒங்க் கடன அடச்சிட்டு நானும் நிம்மதியா இருப்பேன். உங்களயும் நிம்மதியா இருக்க வைப்பேன். நான் ஓடுவேன் ஓடிகிட்டே இருப்பேன். காம்பவுண்ட் போட்டாலும் ஏறிகுதிச்சு ஓடுவேன். எல்லோரும் சேர்ந்து ஜெயிப்போம்னு நல்ல மணப்பாண்மையோட இருக்கேன். என்ன ஓடவச்ச உங்களுக்கு நன்றி. என்ன நீங்க பாராட்டுற காலம் வரும்னு நம்புறேன்.” எனக் கூறியிருக்கிறார் விமல்.
ஆனால் தற்போது விமல் வெளியிட்ட புதிய ஆடியோவில், “அது இரண்டரை வருடம் முன்பு, அவர்கள் கொடுத்த மன உளைச்சலில் போட்ட பழைய ஆடியோ, அது இப்போது பரவுகிறது. அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்” என கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் விமல் கேட்டுக்கொண்டுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8