'விக்ரம்' நடிக்கும் கோப்ரா படத்தின் வைரலாகும் BTS IMAGE! மஜாவான ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'விக்ரம்' நடிக்கும் கோப்ரா படத்தின் BTS Image வைரலாகின்றன!

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.  இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 23 முதல் துவங்கி நடைபெற்று வருவதாக அஜய் ஞானமுத்து ஏற்கனவே அறிவித்தார். பின்னர் திடிரென நடிகர் விக்ரமுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்டு கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.  இந்நிலையில் நேற்றுடன் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு கேக் வெட்டி நடிகர் விக்ரமுக்கு பிரியாவிடை அளித்துள்ளனர்.இது சம்பந்தப்பட்ட BTS புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vikram completed his portions in Cobra Movie

People looking for online information on Ajay Gnanamuthu, கோப்ரா, விக்ரம், BTS, Cobra, Vikram will find this news story useful.