SPB-யின் இறுதி அஞ்சலி.. விஜய் செய்த நெகிழ வைக்கும் செயல்.. வைரலாகும் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் செய்துள்ள செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஜய் இன்று கலந்து கொண்டார். அவர் திரும்பி செல்லும் போது., ரசிகர்களின் கூட்டத்தினால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ரசிகர் ஒருவரின் காலணிகள் கீழே விழ, அதை நடிகர் விஜய் உடனடியாக எடுத்து கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

 

SPB-யின் இறுதி அஞ்சலி.. விஜய் செய்த நெகிழ வைக்கும் செயல்.. வைரலாகும் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கில் விஜய் நெகிழ்ச்சி செயல் | Actor vijay's gesture in sp balasubrahmanyam's funeral is viral

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, Vijay will find this news story useful.