தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.
வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தி ரூட் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பல்வேறு ஏரியாக்களில் வாரிசு திரைப்பட உரிமைத்தை கைப்பற்றியிருக்கும் விநியோகஸ்தர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி எஸ் பாலமுரளி கைப்பற்றி உள்ளார் எனவும் சேலம் கார்ப்ரேஷனை செந்தில் கைப்பற்றி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.