VARISU : விஜய் நடித்த 'வாரிசு'.. 7 நாள்ல உலக அளவில் இத்தனை கோடி வசூலா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் ஒரு வார வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Actor Vijay Varisu 7 Days world wide Box Office Collection
Advertising
>
Advertising

Also Read | "சண்டை போட்டவங்க ஒண்ணு சேருற நாளு போல".. அசிம் - மகேஸ்வரி, ஜிபி முத்து - விக்ரமன்.. நெகிழ்ச்சி Moments!!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது. அன்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்த வாரிசு படம், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது என தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிததுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வாரிசு படம், 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | THUNIVU: மகனுடன் பிரபல தியேட்டரில் 'துணிவு' படம் பார்த்த ஆந்திரா அமைச்சர் ரோஜா.. வைரல் புகைப்படம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Varisu 7 Days world wide Box Office Collection

People looking for online information on Varisu, Varisu Box Office Collection, Vijay will find this news story useful.