பாலிவுட்டுக்கு பறக்கிறாரா விஜய் சேதுபதி.?! பிரபல ஹீரோ மற்றும் இயக்குநருடன் செம கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர், துகளக் தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அடுத்ததாக பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஷாகித் கபூர் நடிக்கும் இந்த வெப் தொடரில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

The Family Man வெப் தொடரை இயக்கி ரசிகர்களை கவர்ந்த ராஜ் - டிகே இத்தொடரை இயக்கவுள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆன்லைன் வெப்தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

ஷாகித் கபூருடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் | Actor vijay sethupathi to act with bollywood hero shahid kapoor

People looking for online information on Shahid Kapoor, Vijay Sethupathi will find this news story useful.