தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.
1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.
பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி படம் வெளியானது. விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடித்து கடைசி படமாக துக்ளக் தர்பார், முகில் படங்கள் ரிலீசாகின. கடந்தாண்டு வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
விஜய் சேதுபதி நடித்து காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன், இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை, மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் நமது BEHINDWOODS சேனலுக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை முன்னிட்டு விஜய் சேதுபதி பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், விக்னேஷ் சிவனுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புகொண்டதாக கூறினார். மேலும் நடிகைகள் சமந்தா, தமன்னா, நயன்தாரா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக நானும் ரவுடி தான் படத்தின் வேற வெர்ஷன் கதையை சொல்லும் போது தூங்கிவிட்டதாகவும், 'போடா போடி' படத்தின் மீதான நம்பிக்கையில் படம் செய்ததாகவும் கூறினார்.
மேலும், படங்களை, இயக்குனர்களை தேர்வு செய்யும் முறை பற்றிய கேள்விக்கும் விஜய் சேதுபதி பதில் அளித்தார். அதில், வெற்றிபெற்ற படத்துக்கும், தோல்வி அடைந்த படத்திற்கும் ஒரே மாதிரியான உழைப்பதாகவும், தனது சினிமா வாழ்க்கையை 250 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்ததாகவும், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.
ஸ்டார் நடிகர்களுக்கு கூட்டம் வரும் என்றும், ஆனால் மக்கள் கதைக்காக மட்டுமே படம் பார்க்க வருவார்கள் என்றும் கூறினார். பல கதைகளை நிராகரிப்பதாகவும், தன்னுடன் இருந்தால் மட்டுமே அவைகள் பற்றி தெரியும் என்றும் கூறினார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/