விஜய் சேதுபதி லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் படங்களைத்தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.

இந்த படத்தை மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார், இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், இயக்குனர் மகிழ் திருமேனி,கனிகா, ரித்விகா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், டீசர் வெளியாக பரவலான வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தினை தயாரிப்பாளர் இசக்கி துரை தயாரித்துள்ளார். மகேந்திரன் வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வரும் டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.