"விஜய் படத்துல இந்த ROLE -ல நடிக்கணும்" - ஷோபாவின் நெடுநாள் ஆசை.. விஜய்யின் REPLY!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குனர் SA சந்திரசேகர் அவர்களின் மனைவியுமான ஷோபா நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

Advertising
>
Advertising

ஷோபா

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இப்படி பன்முக திறமை கொண்டவராக திகழும் ஷோபாவை கலை பாரம்பரிய ஆலோசகராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நியமித்திருந்தார். தற்போதும் இசையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் ஷோபா, தன்னுடைய கலையுலக வாழ்வு மற்றும் தனது குடும்பம் பற்றி பல்வேறு தகவல்களை ஷோபா பகிர்ந்திருக்கிறார்.

நெடுநாள் ஆசை

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணனிடம் திரைப்பட இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் குறித்து ஷோபா ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அப்போது இதுவரையில் நான்கு படங்கள் இயக்கி இருப்பதாகவும் பின்னர் 'ஆர் யூ ஓகே பேபி' படத்தினை இயக்கியதாகவும் அவர் தெரிவித்தார் மேலும், படத்தில் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

விஜய் சொன்ன பதில்

அப்போது, படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இருப்பதாக குறிப்பிட்ட ஷோபா,"விஜய்க்கு அம்மாவா படத்துல நடிக்கணும்னு ஆசை. ஒருதடவை சீரியஸாவே அவர்கிட்ட சொன்னேன். ஒருதடவை அம்மாவா நடிக்கணும்பா-ன்னு. 'நீங்க அம்மாவா நடிச்சா, எனக்கு சிரிப்பு வரும்மா, லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்னு சொல்லி நான் உங்களை பார்த்தா உடனே சிரிச்சுடுவேன்மா. நாம விளம்பரம் பண்ணலாம்'-னு சொல்லிட்டாரு" என கலகலப்பாக பதிலளித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தன்னுடைய தினசரி நடவடிக்கைள் பற்றி பேசியிருந்த ஷோபா சந்திரசேகர் தினமும் பாக்கியலட்சுமி, எதிர்நீச்சல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகங்களை விரும்பி பார்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Tags : Shoba, SAC, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Mother shoba on her Wish to Act in Movie

People looking for online information on SAC, Shoba, Vijay will find this news story useful.