நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குனர் SA சந்திரசேகர் அவர்களின் மனைவியுமான ஷோபா நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
ஷோபா
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இப்படி பன்முக திறமை கொண்டவராக திகழும் ஷோபாவை கலை பாரம்பரிய ஆலோசகராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நியமித்திருந்தார். தற்போதும் இசையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் ஷோபா, தன்னுடைய கலையுலக வாழ்வு மற்றும் தனது குடும்பம் பற்றி பல்வேறு தகவல்களை ஷோபா பகிர்ந்திருக்கிறார்.
இளையராஜா
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணனிடம் திரைப்பட இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் குறித்து ஷோபா ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அப்போது இதுவரையில் நான்கு படங்கள் இயக்கி இருப்பதாகவும் பின்னர் 'ஆர் யூ ஓகே பேபி' படத்தினை இயக்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், படத்தில் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஷோபா சந்திரசேகர்," இளையராஜா சார் அன்னக்கிளி படத்துக்கு பின்னணி இசை உருவாக்கும்போது என்ன மனநிலையில் இருந்தாரோ, இப்பவும் அப்படிதான் இருக்காரு" என்றார். தொடர்ந்து தான் இயக்கிய படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார் இதனால் ஆச்சர்யம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அதுபற்றி கூறும்படி ஆர்வத்துடன் கேட்டார்.
Images are subject to © copyright to their respective owners.
இயக்குநர்
அப்போது பேசிய ஷோபா சந்திரசேகர்," நான் 2 படங்கள் டைரக்ட் பண்ணேன். 'நண்பர்கள்' ஒரு படம் அப்புறம் 'இன்னிசை மழை'-ன்னு ஒரு படம். இதுல இன்னிசை மழை படத்துக்கு ராஜா சார் தான் இசை அமைத்தார். அதுல 9 பாட்டு வச்சிருந்தோம். என் கணவர் 'என்னை சட்டம் இயக்குநர்னு முத்திரை குத்திட்டாங்க. இது காதல் கதையா இருக்கு, அதுனால நீயே டைரக்ட் செய்'-னு சொல்லிட்டாரு. அவர் அசோசியேட் டைரக்டரா இருந்து நெறய ஹெல்ப் பண்ணாரு. பெண்கள் இயக்குநரா இருக்கது என்னை பொறுத்தவரையில் சவாலான காரியம் தான்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
நண்பர்கள் படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், நாகேஷ், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். 1992 ஆம் ஆண்டு வெளியான இன்னிசை மழை படத்தில் ஷோபா சந்திரசேகர் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியுடன் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.