தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும், நடிப்பிற்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஷுட்டிங்கின் போது செய்த விஷயம் ஒன்று தற்போது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

ஆம் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கின் போது வேன் மீது ஏறி அங்கு நின்றிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி ஒன்றை எடுத்தார். அந்த செல்பி மிகவும் வைரலானது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் அந்த செல்பி இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்ட பதிவாக தேர்வாகியுள்ளது. மேலும் அதனை 134.8 ஆயிரம் பேர் பகிர்ந்து, 356.4 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த விஷயத்தை தளபதி வெறியர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர்.