"என் பிரியாணினா விஜய்க்கு உசுரு".. பனையூர் FANS MEET-ல் பிரியாணி சமைத்த இப்ராஹிம் நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார். அதன்பிறகு அவர்களுக்கு பிரியாணி விருந்து நடைபெற்றது.

Actor Vijay Loves my Briyani says chef Mohammed Ibrahim
Advertising
>
Advertising

Also Read | செம்ம டான்ஸ்.. ரஞ்சிதமே பாட்டுக்கு நடனமாடி அசத்திய குயின்ஸி & ஷெரினா! வீடியோ

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார். நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. தற்போது 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Actor Vijay Loves my Briyani says chef Mohammed Ibrahim

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.

முதல்கட்ட சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் (ரசிகர்கள்) விஜய்யை சந்தித்து  புகைப்படங்கள் எடுத்தனர்‌. இன்று நடைபெற்ற அடுத்த கட்ட சந்திப்பில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார். அடையாள அட்டை வைத்துள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நிர்வாகிகளுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த பிரியாணியை சமைத்த முகமது இப்ராஹிம் இதுகுறித்து பேசுகையில்,"கடந்த 7,8 வருடங்களாக தளபதிக்கு நாங்கள் தான் பிரியாணி சமைத்துக்கொடுத்து வருகிறோம். எப்போதுமே எங்களுக்கு தான் ஆர்டர் கொடுப்பார். இன்னைக்கு பிரியாணி நல்லா இருந்தது என சொன்னாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. எங்களுக்கு சலாம் சொன்னாரு. மேலும் மேலும் அவர் நல்லபடியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Also Read | பனையூரில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து.. புது ஹேர் ஸ்டைலில் வந்த தளபதி விஜய் 😍 வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Loves my Briyani says chef Mohammed Ibrahim

People looking for online information on Briyani, Chef Mohammed Ibrahim, Panaiyur VMI Office, Vijay, Vijay meets fans will find this news story useful.