தளபதி 65-காக அந்த நாட்டிற்கு சென்றுள்ள நடிகர் விஜய்... வெளியான வேற லெவல் லேட்டஸ்ட் போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீங்கள் ஒரு உண்மையான தளபதி ரசிகர் என்றால் டிசம்பர் 2020 ஐ மறக்க முடியாது, ஆம் அன்று தான்  தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பு, ஒரு மரண மாஸ் வீடியோவுடன் வந்தது.

கடந்த மாதம் DOP மனோஜ் பரமஹம்சா தான் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறும்போது, தளபதி 65 ஒரு பான்-இந்தியன் படமாக இருக்கும் என்று கூறினார். இதனையடுத்து விஜய்யின் லுக் டெஸ்ட் சன் ஸ்டுடியோவில் பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.  தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தில் அவருக்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே  நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் முதன்முறையாக இணையும் இந்த் காம்போ நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கப்போகும் 65-வது படத்தின் பூஜை கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கியது. நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன்  மற்றும் பட குழுவினர் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட மகிழ்ச்சியாக தளபதி விஜய் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay latest photo on thalpathy 65 தளபதி 65-காக அந்த நாட்டிற்கு சென்றுள்ள விஜய்

People looking for online information on Thalapathy 65, Vijay will find this news story useful.