நடிகர் விஜய் வீடு‌ & விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடி.. வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் வீடு‌ மற்றும் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது

Advertising
>
Advertising

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது வீட்டில்  மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உள்ளார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.‌

இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.‌ அசாதி கி அம்ரித் மஹாஉத்சவ் என இந்த நிகழ்வில் 75 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உள்ள இந்தியர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவும், ஒவ்வொரு இந்தியர்களின் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில்தான் நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும் பனையூர் விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல் தற்போது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay House Office Indian National Flag Independence Day

People looking for online information on Neelankarai Home, Panaiyur Office, Vijay will find this news story useful.