நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | கையில் Trips உடன் ‘CWC’ சிவாங்கி… என்ன ஆச்சு?... அவரே வெளியிட்ட புகைப்படம்!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்…
பீஸ்ட் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் ஆக்ஷனுக்கு நிகராக குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.
தளபதி 66 கலைஞர்கள்…
கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஐதராபாத் படப்பிடிப்பு…
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அப்போது ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதையடுத்து படத்தில் நடிக்கும் நடிகர்களான பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதுபோலவே விஜய் இயக்குனர் வம்சியோடு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்ததும் கவனத்தைப் பெற்றது.
சென்னை திரும்பிய விஜய்..?
இதையடுத்து விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பபு நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படப்பிடிப்பை முடித்த நடிகர் விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சென்னை ஏர்ப்போட்டில் மாஸ்க் அணிந்தபடி விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | டாணாக்காரனுக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம்… Title உடன் வெளியான மிரட்டலான போஸ்டர்!