ட்விட்டரில் வாரிசு DP -ஐ வெச்ச தளபதி விஜய்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Advertising
>
Advertising

Also Read | பொங்கலுக்கு துணிவு.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்! போடு வெடிய

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வாரிசு படத்தின் ஸ்டில்லை  நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளார். தற்போது இந்த புதிய முகப்பு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | Harish Kalyan Wedding : ஹரிஷ் கல்யாண் திருமணம்.. தாலி கட்டிய தருணம்.. TRENDING PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Changed to Varisu Pic in Twitter DP

People looking for online information on Varisu, Vijay, Vijay Changed his Twitter DP will find this news story useful.