மகளுடன் விமானத்தில் பயணம் செய்த விமல்.. கேப்ஷனில் சொன்ன நெகிழ்ச்சியான விஷயம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பசங்க, களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியல் அதிகம் கவனம் ஈர்த்தவர் நடிகர் விமல்.

Advertising
>
Advertising

நாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பசங்க' திரைப்படத்தின் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, களவாணி, வாகை சூடவா, கலகலப்பு என நாயகனாக விமல் நடித்திருந்த பல திரைப்படங்கள், மக்கள் மத்தியில் விமலை இன்னும் அதிகம் பிரபலம் ஆக்கி இருந்தது.

அடுத்தடுத்து பல திரைப்படங்கள் நடித்து வந்த விமல் நடிப்பில், சமீபத்தில் 'விலங்கு' என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த விலங்கு வெப் சீரிஸில், விமலுடன் இனியா, பால சரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். க்ரைம் த்ரில்லர் வகையில் இந்த தொடர் உருவாகி இருந்த நிலையில் வேற லெவலில் ஹிட்டாகியும் இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடிகர் விமல் அடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகளுடன் விமானத்தில் பயணம் செய்தது தொடர்பாக விமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மகளுடன் இருக்கும் சில புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த விமல், தனது கேப்ஷனில், "யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ? " என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையவாசிகள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor vemal travel in flight with her daughter shares pic

People looking for online information on Daughter, Flight, Vemal will find this news story useful.