களவாணி, பசங்க உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல்,
விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடம் போன்ற சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரமாக விமல் தோன்றியிருந்தாலும் ஹீரோவாக களவாணி திரைப்படம் விமலுக்கு முக்கியமான திரைப்படமாகவும், வாகை சூடவா திரைப்படம் கவனிக்கத்தக்க திரைப்படமாகவும் அமைந்தது.
நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி. கடந்த 2010-ம் ஆண்டு விமலுக்கும் பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடந்தது. இரண்டு இந்த தம்பதியருக்கு மகன்களும் ஒரு பெண் குழந்தையும் என இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தன் மகளின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விமல், மனைவி மற்றும் மகன்களுடன் மகளின் புகைப்படங்களை தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அந்த பதிவில், “எங்கள் குட்டி தேவதை ஆத்விகா விமலை அவரது முதல் பிறந்த நாளில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி” என நடிகர் விமல் பதிவிட்டுள்ளார்.
மகன்கள் மற்றும் மகள் மட்டும் இருக்கும் இன்னொரு படத்தையும், மகள் மட்டும் இருக்கும் படத்தையும் பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.
ALSO READ: அட.. டைரக்டர் முருகதாஸா இது? அப்பவே இப்படி நடிச்சுருக்காரே? அவரே பகிர்ந்த வைரல் வீடியோ!