விஜய் சேதுபதியின் DSP படத்தில் நடிகர் விமல்.. தியேட்டரில் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிக்கும் DSP படத்தில் நடிகர் விமல் கேமியோ பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மலேசியால மாஸ் காட்டப்போகும் துணிவு.. தியேட்டர் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் & செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்தது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

இயக்குனர் பொன்ராம், ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர். இதனால்  விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கியுள்ள டிஎஸ்பி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

இச்சூழலில் தான் DSP திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் காலை காட்சிகளை ரசிகர்கள் காணும் போது இந்த படத்தில் நடிகர் விமல் கேமியோ பாத்திரத்தில் திரையில் தோன்றியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படத்தில் விமல் சொல்லும் குட்டிக்கதையும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த ஷாருக்கான்.. இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை! வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vemal Cameo Appearance in Vijay Sethupathi DSP Movie

People looking for online information on DSP Movie, Vemal, Vemal Cameo Role in DSP Movie, Vijay Sethupathi, Vijay Sethupathi DSP Movie will find this news story useful.