தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞரான வடிவேலு 10 ஆண்டுகளாக பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் அவர் நகைச்சுவைக் காட்சிகளுக்கான பிரபல்யம் கொஞ்சம் கூட குறைவதில்லை…

10 ஆண்டுகால இடைவெளி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இதற்கிடையில் அவர் நடிப்பில் தொடங்கிய இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் ட்ராப் ஆனது. ஆனால் சமூகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் வடிவேலுவை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். மீம்ஸ் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வடிவேலுவின் ரியாக்ஷன்கள், வசனங்கள், பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும். சமூகவலைதளங்களின் வளர்ச்சியால் வடிவேலு அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஒரு கலைஞராக இருந்து வருகிறார்.
வடிவேலு ரி எண்ட்ரி…
சமீபத்தில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படத்திலும், பின்னர் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா திரைப்படத்திலும் தோன்றிய நடிகர் வடிவேலு, இதனை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவர் இசையில் வடிவேலு ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
நாய்சேகரும் மாமன்னனும்…
நடிகர் வடிவேலு நடிப்பில், பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த முக்கியமான கேரக்டர் நாய் சேகர். இந்த கேரக்டர் தலைநகரம் திரைப்படத்தில் அனைவரையும் கவனிக்க வைத்த காமெடி கேரக்டர். 2006-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்கியவர் சுராஜ். சுந்தர்.சி நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த எபிக் கேரக்டர்தான் ‘நாய் சேகர்’. இந்த கேரக்டர் தான் தற்போது வடிவேலு நடிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்துக்கு அடித்தளமாக அமைந்தது. நாய் சேகர் படத்துக்குப் பிறகு வடிவேலு ஒப்புக்கொண்ட இரண்டாவது படமாக மாரி செல்வராஜின் மாமன்னன் படம் அமைந்துள்ளது. இப்படி சில ஆண்டுகளாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ‘மாமன்னன்’ பட அறிவிப்பு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
Sing in the Rain with prabhudeva….
இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து சமீபத்தில் வடிவேலு வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருவரும் இணைந்து நடித்து வடிவேலு மற்றும் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக இன்றளவும் பேசப்படும் ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் தான் பாடிய சிங் இன் தி ரைன் பாடலை பாடியுள்ளார். அந்த வீடியோவில் வடிவேலு பாடுவதை ரசித்துக் கேட்டுள்ளார் பிரபுதேவா. இந்த வீடியோவுக்குக் கீழ் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் குறித்து சிலாகித்து வருகின்றனர்.
பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் உருவான காதலன், ராசய்யா, மிஸ்டர் ரோமியோ, பெண்ணின் மனதைத் தொட்டு உள்ளிட்ட ஏராளமான படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.