சூர்யா, ஜோதிகாவிற்கு நன்றி சொன்ன பிரபல தமிழ் நடிகர்!!! ஏன் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்த 4 நான்கு மாதங்களான செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில்  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகின்றன. 

ரம்யா பாண்டியன், வாணி போஜன் நடிப்பில் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியள்ளார். இந்த காமெடித் திரைப்படம் செப்டம்பர் 2021-ல் ரிலீஸ் ஆகிறது.

த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் ஒரு கோர்ட் டிராமா திரைப்படம். பழங்குடியின மக்களின் உரிமை போராட்டத்தை பேசும் இந்த படத்தில் கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் நடிக்க, சூர்யா மிக முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நவம்பர் 2021-ல் அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகிறது.

இதனை அடுத்து சசிகுமார், ஜோதிகா நடிப்பில், ஃபேமிலி டிராமா வகைமையில் தயாரான 'உடன்பிறப்பே' படத்தை பத்திரிக்கையாளரும், இயக்குனருமான  இரா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் 2021-ல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

டிசம்பர் 2021-ல் அருண் விஜய், அர்ணவ் விஜய் (அருண் விஜயின் மகன்), விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினய் ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய  ‘ஓ மை டாக்’ என்கிற படமும் இடம்பெற்றிருக்கிறது. அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம்  அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர் பகுதியில் நடந்தது.

இந்த ஓ மை டாக் படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்துள்ளார். இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் இந்த படம் டிசம்பரில் வெளியாகிறது, மிகச்சிறந்த நினைவுகளை கொடுத்தமைக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor thanks to suriya jyothika 2d entertainments

People looking for online information on 2D Entertainment will find this news story useful.