நடிகர் அஜித்குமார் பரபர அறிக்கை..!“தல என அழைக்க வேண்டாம்“ .. பட்ட பெயர்களே வேண்டாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இனி என்னை தல என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் அன்பான வேண்டுகோளை அறிக்கையாக விடுத்துள்ளார். இதனை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் வெளியிட்டுள்ள குறிப்பில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Thala AjithKumar Statement Regarding THALA Nick Name

People looking for online information on Ajithkumar, Thala Ajith will find this news story useful.