உலகளவில் பிரபலமான இடத்திலிருந்து வைரலாகும் "தல" அஜித்தின் புகைப்படங்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தல அஜித் தற்போது வட இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தல அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. மேலும் தல அஜித் தனது குடும்பத்துடன் ஜெய்பூரில் நாட்களை செலவிட்டார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வைரலானது.

அதனைத்தொடர்ந்து, தற்போது தல அஜித் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபின் வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் (Border Security Force) எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Thala AjithKumar in INDIA PAKISTHAN wagah border

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.