நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் தற்போது பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியாவுக்கு அவரது தற்கொலை தொடர்பிருப்பதாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் மரணத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகையும் அவரின் காதலியுமான ரியாவின் வழக்கறிஞர் கூறியதாவது, '' அமலாக்க துறை ரியாவின் வங்கி கணக்கு விவரங்களை பார்த்துவிட்டனர். அதில் சுஷாந்த் சிங் பணத்தை மோசடி செய்ததாக எதுவும் இல்லை'' என அவர் தெரிவித்தார்.
மேலும் நடிகை ரியா சுஷாந்தின் அக்கா பிரியங்கா மீது வைத்து குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், ''சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில், ஒருநாள் சுஷாந்தின் அக்கா நன்றாக குடித்துவிட்டு, போதையில் நடிகை ரியாவிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்துள்ளார். இதையடுத்து ரியாவை அவரை உடனடியாக ரூமை விட்டு செல்லும் படி சொல்லியுள்ளார். மேலும் சுஷாந்திடமும் இந்த விஷயத்தை அவர் அடுத்த நாள் சொல்லியுள்ளார். இதனால் சுஷாந்துக்கும் அவரது அக்காவுக்கு அப்போது வாக்குவாதம் நடந்தது. மேலும் இந்த சம்பவத்தில் இருந்து ரியா சுஷாந்த் குடும்பத்தினருடன் பழகுவதை தவித்துள்ளார்'' என அவர் தெரிவித்தார்.