கிளாஸிக் சூர்யா! செம கிளாஸியான 'ET' 3வது லுக் போஸ்டர்! ஆச்சர்யத்தில் சூர்யா இரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின்  போஸ்டர் இன்று (23.07.2021) நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.

இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, இரசிகர்களை ஆச்சர்யப்படுத்த இன்று மதியம் ஒரு மணிக்கு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

2nd Look Poster போலவே இதிலும் கருப்பு சிவப்பு நிறங்களை போஸ்டரில் பயன்படுத்தியுள்ளனர். சூர்யாவின் முகம் மோனோ குரோமேட்டிக் டோனில் உள்ளது ‌.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார்.

 

ஏற்கனவே முதல் லுக் வீடியோ நேற்று ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor surya next ET movie 3rd look poster released

People looking for online information on D Imman, Priyanka Mohan, Suriya will find this news story useful.