தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி அடைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்குத் தற்சமயம் 'சூர்யா 4௦' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் பிறகு, இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா முதன்முறையாக இணையும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூர்யா, நீட் தேர்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. அதில் கூறியதாவது:
நீட் தேர்வின் பாதிப்புகளையும், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் துயரங்களையும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசுப்பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். இங்கு ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வுமுறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.