சூரரைப் போற்று ரிலீஸ்.. சூர்யா ரசிகர்களுக்கு செய்த மரியாதை.!! ஜெர்மனி வரை பறந்த அன்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இன்று இரவு நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்களின் கையெழுத்துக்களை தாங்கிய போஸ்டரை, ஜெர்மனிக்கு கொண்டு சென்று, அதை பலூன் மூலம் அங்குள்ள தொழில்நுட்ப குழுவினரோடு சென்று வானில் பறக்கவிட்டுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சூர்யாவின் செயலுக்காக அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இன்று வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் வெகுவாக எகிறியுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா ரசிகர்களுக்காக செய்த விஷயம் | actor suriya's tribute to his fans over soorarai pottru release

People looking for online information on Soorarai Pottru Tamil, Sudha Kongara, Suriya will find this news story useful.