நடிகர் சூர்யாவின் ரீசன்ட் ஆடியோ மெசேஜ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து இவர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரீசன்ட் ஆடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது ரசிகர்கள் கொரோனா வைரஸ் நேரத்தில் உதவிகள் குறித்து பேசியுள்ள அவர், இந்த கடினமான சூழலில் தொடர்ந்து உதவிகள் செய்வது சாதாரண விஷயமல்ல, இதை யாருக்கும் ப்ரூவ் பண்ண செய்யல, ஒரு மன நிறைவுக்காகதான் செய்யுறோம், தொடர்ந்து உதவிகள் பண்ணுங்க, உங்களை வருத்திக்காம செய்ங்க, பாதுகாப்பா இருங்க, யாருக்கு ரொம்பவே கஷ்டம் இருக்கோ, அவங்களுக்கு இந்த உதவிகள் போய் சேர்கிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள், முடிந்தவரை ப்ளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிருங்கள், நிறைய தம்பிகள் இப்படி உதவி செய்து வருகிறார்கள். தொடர்ந்து இப்படி செய்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள்.