நடிகர் சூர்யா செய்த உதவியால், தற்போது 1300 தயாரிப்பாளர்கள் பலன் அடைந்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது.
இது ஒரு புறமிருக்க, கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது .
இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தற்போது திரு கே ஆர் , திரு முரளிதரன் , திரு KJR ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் நீதிபதி தெரிவித்துள்ளார்.