PS-1 டீசர் : தமிழ்'ல ரிலீஸ் பண்ண போறது இவர் தானா??.. எதிர்பார்ப்பை எகிற வைத்த 'UPDATE'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எழுத்தாளர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இதனை அடிப்படையாக கொண்டு, பிரபல இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இதன் முதல் பாகம், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த PS1 படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து வெளியான போஸ்டர்கள்

அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தாரணி கலை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

டீசர் ரிலீஸ் குறித்த அசத்தல் அப்டேட்

படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் டீசர் குறித்தும் அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. PS-1 படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நாளை (07.07.2022) சென்னையின் Trade Center-ல் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை யார் வெளியிட உள்ளார்கள் என்பது பற்றி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை ஹிந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், தமிழில் நடிகர் சூர்யாவும் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவில் காண ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ள நிலையில், அதன் டீசர் வெளியீடு மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உருவாகி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Suriya to release ponniyin selvan first part teaser

People looking for online information on Aishwarya rai, AR Rahman, Jayam Ravi, Karthi, Lyca Productions, Madras Talkies, Maniratnam, Ponniyin Selvan, PS-1, Trisha, Vikram will find this news story useful.