சமீபத்தில் நீட் தேர்வை கடுமையாக கண்டித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்திருந்தார். அந்த அறிக்கையில் "நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு'வாழ்த்து' சொல்வதற்கு பதிலாக 'ஆறுதல்' சொல்வதை போல அவலம் எதுவுமில்லை.கொரானா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுத தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது" என்று கூறினார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடா வேண்டும் என்று சிலர் குறி வந்த நிலையில் பல வழக்கறிஞர்களும், நீதி துறையை சார்ந்தவர்களும் அவருக்கு உறுதுணையாக நின்றனர். இந்நிலையில் தற்போது சூர்யா அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் "அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம், ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.