ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியது.
'ஜெய் பீம்' திரைப்படத்தின் கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார்.இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் , நடிகர் நாசர் மற்றும் தென்னிந்திய வர்த்தக சபை, கவிஞர் தாமரை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பலதரப்பில் இருந்தும் சூர்யாவுக்கு ஆதரவாக, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரிடம் சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்கும்படியான வேண்டுகோள் கடிதங்களும் வெளியாகின. இன்னொருபுறம் திருமாவளவன், இந்திய மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில கட்சி மற்றும் அரசியல் இயக்க தலைவர்களும் சூர்யாவின் ஜெய்பீம் படத்தை பாராட்டி இருந்தனர்.
சமீபத்தில் இந்த ஜெய்பீம் பட விவகாரம் விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குனர் ஞான வேல் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் - தயாரிப்பாளார் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், அமேசான் நிறுவனம், 2D நிறுவனம் மீது அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.