ஆஸ்கர் 2022 க்கான கமிட்டியில் இணைய 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் கமிட்டியில் சூர்யா
ஆண்டுதோறும் சிறந்த படங்களுக்கான விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் செவ்வாயன்று 397 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளை ஆஸ்கார் அமைப்பாளரின் உறுப்பினர் வரிசையில் சேர அழைப்பு விடுத்துள்ளது. 2022 வகுப்பில் 71 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களும் 15 வெற்றியாளர்களும் அடங்குவர், இதில் அழைக்கப்பட்டவர்களில் 44% பெண்களும், குழுவில் 37% இதுவரை பிரதிநிதிதுவம் செய்யப்படாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
ஆஸ்கரின் சூர்யா படம்
இந்த பட்டியலில் தமிழ் நடிகர் சூர்யாவும் இடம்பெற்றிருப்பது பெருமைமிகு விஷயமாக கருதப்படுகிறது. முன்னதாக சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இருந்தது. 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட்டது. 366 படங்களில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரைப் போற்று அந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இறுதிப் பட்டியலுக்கு ‘சூரரைப் போற்று’ தேர்வு செய்யப்படவில்லை.
சூர்யாவுக்கு குவியும் வாழ்த்து
அதேபோல சூர்யாவின் மற்றொரு விமர்சனரீதியாக வெற்றி பெற்ற ‘ஜெய்பீம்’ படத்தின் சில காட்சிகள் ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் ஒளிபரப்பானது. இந்த இரு படங்களின் விமர்சன ரீதியாக பாராட்டுகளால் சூர்யா ஆஸ்கர் கமிட்டிக்கு அழைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய செய்தி தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் சூர்யாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.