“இது என் CLOSE FRIEND சார்…” ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா… கட்டியணைத்து வரவேற்ற MADDY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா ராக்கெட்ரி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் வீடியோவை மாதவன் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஆண்டவர் onfire… workout வீடியோ Glimpse-ஐ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

ராக்கெட்ரி

2017 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்! (Rocketry - The Nambi Effect) எனும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினார் நடிகர் மாதவன். கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

ரிலீஸ்

2019 ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்குகிறார். இது அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும். இந்த படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் என நான்கு மொழிகளில் உருவாகிறது. மலையாளம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.

சர்வதேச ப்ரமோஷன்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. அதுபோலவே அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் படத்தின் டிரைலரை மாதவன் வெளியிட்டார். சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூர்யா கலந்துகொண்டு பேசியது கவனம் ஈர்த்தது. இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக் கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை மாதவன் பகிர்ந்துள்ளார். வீடியோவில்  விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்கிறார். நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் ரசிகன் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Also Read | விக்ரம் நடிக்கும் ’கோப்ரா’… ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமை… கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor suriya in Rocketry shooting spot viral video

People looking for online information on Madhavan, Rocketry movie, Rocketry movie shooting spot, Suriya will find this news story useful.