"விஜய், அஜித்துக்கு கதை சொல்லிருக்கேன்" - நடிகர் SUPER GOOD சுப்ரமணி -யின் மறுபக்கம்.! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முண்டாசுப்பட்டி, சூரரைப் போற்று, ஜெய் பீம் உட்பட எக்கச்சக்க திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி. இவர் ஒரு சில படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ள சூழலில், கடந்த 30 ஆண்டுகள் சினிமா துறையிலும் இருந்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

நிறைய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நடிகர் சுப்பரமணி கவனம் பெற்றாலும் இயக்குனராக முடியாமல் அதற்காக ஏராளமுறை முயற்சிகளும் செய்துள்ளார். எப்படியாவது ஒரு படம் இயக்குவேன் என சூப்பர்குட் சுப்ரமணி கூறி வரும் சூழலில், சமீபத்தில் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் தான் பல நடிகர்களிடம் கதை சொல்லி வருவது பற்றியும் , ஆனால் இயக்குனராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் எழுதி இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கதை திரைப்படமாகாமல் போனது பற்றி பேசியிருந்த நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி, "நான் ஆம்புலன்ஸ் டிரைவர் கதை, விஜயகாந்த்ல இருந்து சரத்குமார் கிட்ட, அஜித்கிட்ட, விஜய்கிட்ட, தெலுங்குல ரெண்டு மூணு பெரிய நடிகர்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன். சிட்டிசன் படத்துல நான் Co டைரக்டரா ஒர்க் பண்ணேன். அதுக்கப்புறம் தெலுங்கில் ஒரு நடிகர் பெரிய அட்வான்ஸ் கொடுத்து, அப்படியே ஆர்ட்டிஸ்ட் பிரச்சனையில மாறி மாறி, அப்புறம் பார்த்திபன் வச்சு கர்த்தான்னு ஒரு படம் பாதி சூட்டிங் முடிச்சேன். அதுக்கப்புறம் பைனான்ஸ் பிரச்சனை எல்லாம் வந்து என்னமோ தெரியல நின்னுருச்சு. அதுக்கடுத்து சூறாவளி ஒரு படத்தோட கதைல உக்காந்தேன். 

Images are subject to © copyright to their respective owners

"பிரபஞ்சன்"ன்னு ஒரு கதை விஜய் சாருக்காக SAC  உக்கார வச்சாரு. அதுக்கப்புறம் சிரஞ்சீவி சாரும் கதை கேட்டாங்க என்னால கொடுக்க முடியல. ஏன்னா நாலு, அஞ்சு கமிட்மெண்ட்ஸ் எனக்கு இருந்துச்சு. கலைஞர் ஐயா முதல்வரா இருக்கும்போது அவர் கூட பெண் சிங்கம் என்ற படத்துல கோ டைரக்டரா ஒர்க் பண்ணி இருக்கேன். அவர் கூட உட்கார்ற ஒரு பாக்கியம் கிடைத்தது.

இவ்வளவு இருந்தும் ஒரு படம் பண்ணி நம்மளால ஜெயிக்க முடியலங்குற அந்த ஆதங்கம், வெறி, வேகம். என்னை மாதிரி கதை சொன்ன அசிஸ்டன்ட் வேற யாரும் இருக்க முடியாது. எம்ஜிஆர், சிவாஜி தவிர எல்லா ஹீரோக்கும் என் கதை தெரியும்" என மிக உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

"விஜய், அஜித்துக்கு கதை சொல்லிருக்கேன்" - நடிகர் SUPER GOOD சுப்ரமணி -யின் மறுபக்கம்.! EXCLUSIVE வீடியோ

Actor Supergood subramani struggle in cinema industry

People looking for online information on Supergood Subramani will find this news story useful.