போடு வெடிய.. தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தில் இணைந்த பிரபல இளம் ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சத்யஜோதி ஃபிலிம்ஸ், தெலுங்குத் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர், தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'  படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. மேலும் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான சந்தீப் கிஷென் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  தெலுங்குத் திரையுலகில் வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராகப் புகழ் பெற்ற சந்தீப் கிஷன், தனது தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து அவர் நடிக்கும் ‘மைக்கேல்’ படமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் அறிமுகமான ‘மாநகரம்’ திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சந்தீப் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த திரைப்படத்திற்காக தனுஷுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும். நடிகர் தனுஷ், தனது திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றதற்காக தெலுங்கு பிரதேசங்களில் பிரமாண்டமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களுக்கு புகழ் பெற்ற அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (உரையாடல்கள்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), டி. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலிப் சுப்பராயன் (சண்டை பயிற்சி), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினர் ஆவர்.

கேப்டன் மில்லர், 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு காலகட்டத் திரைப்படமாகும், மேலும் இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sundeep Kishen is onboard for Dhanush Captain Miller

People looking for online information on Captain Miller, Dhanush, Sundeep Kishen will find this news story useful.