பிரபல சீரியல் நடிகர்.. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திலயா? இத எதிர்பாக்கவே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 

Advertising
>
Advertising

Also Read | THALAPATHY66: விஜய்யுடன் முதல் நாள் ஷூட்டிங்.. துள்ளிக்குதித்த ராஷ்மிகா! வியந்து போட்ட வைரல் பதிவு

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல், நேற்று மே 11 ஆம் தேதி  வெளியாகியுள்ளது. 'பத்தல பத்தல' என தொடங்கும் இந்த பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ நடித்துள்ளார். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.

இவர் இசையமைப்பாளர் கணேஷின் மகனாவார். 20 ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா ஆகிய சீரியல்களில் நடித்தவர். தற்போது வானத்தை போல சீரியலில் சின்ராசாக நடித்து வருகிறார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

பிரபல சீரியல் நடிகர்.. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திலயா? இத எதிர்பாக்கவே இல்லையே வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sree doing a role in Kamal Haasan Lokesh Vikram Movie

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Sree, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.