'அய்யோ., பாவம்.!' - ஒரு சாக்லேட்டுக்கு எவ்வளவு பெரிய போராட்டம். - நடிகர் பகிர்ந்த வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள க்யூட் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

மலையாள சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் சௌபின் ஷாஹிர். இவர் நிவின் பாலி நடித்த ப்ரேமம் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இவர் நடித்த கம்மட்டிபாடம், கும்பலங்கி நைட்ஸ், ட்ரான்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சௌபின் ஷாஹிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அம்மாவுக்கு தெரியாமல் ஒரு குழந்தை, சாக்லேட்டை எடுக்க செய்யும் சேட்டைகள் கொண்ட வீடியோவை அவர் மிகவும் ரசித்து பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் குழந்தையின் குறும்புத்தனத்தை வெகுவாக ரசித்து வருவதோடு, அய்யோ.., பாவம் பாப்பா என கமன்ட்ஸ் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகர் பகிர்ந்த க்யூட் வீடியோ செம வைரல் | Actor Soubin Shahir shares a cute video of a kid and goes viral

People looking for online information on Cute Video, Soubin Shahir, Viral will find this news story useful.