‘விடுதலை’ ஷூட்டிங் ஸ்பாட்டையே GYM -ஆக மாற்றிய சூரி… வேறமாரி WORKOUT… வைரல் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் விடுதலை திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்று.

Advertising
>
Advertising

விடுதலை…


தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ மற்றும் 'பாவக்கதைகள்' (ஒரு இரவு) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இயக்கும் படமாக “விடுதலை” உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முதலாக இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றுகிறார் வெற்றிமாறன். விடுதலை திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.

விஜய் சேதுபதியும் சூரியும்…

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலீசாக நடிக்கிறார். இந்த படத்துக்கு வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். முன்னதாக விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன.

சூரியின் வீடியோ..

இந்த படத்தில் சூரி போலீஸ் வேடத்தில் நடிப்பதால் அதற்காக உடலைக் கட்டுக்கோப்பாக பேணி வருகிறார். முன்னர் உடற்பயிற்சி கூடத்தில் work out செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்த சூரி, இப்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே பல வகை உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக சூரி சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் உடலோடு தோன்றியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor soori workout video in viduthalai shooting spot

People looking for online information on Soori, Vetrimaaran, Vijay Sethupathi will find this news story useful.