போடு சக்க.. வாடிவாசல் டெஸ்ட் ஷூட் ஃபோட்டோ பகிர்ந்த வெற்றிமாறன் பட நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

KGF2: “குறுக்க மட்டும் போயிடாதீங்க”… மாஸ் வரிகளில் அதகளம்- வெளியான TOOFAN பாடல்!

வெற்றிமாறனும் நாவல்களும்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். நல்ல கதைகளை ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக படமாக்குவதில் வல்லவர் இயக்குனர் வெற்றிமாறன்.  தனது சமீபகாலப் படங்களுக்கான கதைக்களத்தை தமிழ் நாவல்களில் இருந்து எடுத்து வருகிறார் வெற்றிமாறன். அவரின் விசாரணை திரைப்படம் லாக்கப் என்ற புத்தகத்தில் இருந்தும், அசுரன் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலில் இருந்தும் தழுவி அமைக்கப்படது. அதே போல அடுத்து அவர் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படமும் எழுத்தாளர் சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது. வாடிவாசல் நாவல் தமிழ் சினிமாவின் கிளாசிக் நாவல்களில் ஒன்றாக வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாடிவாசல் அறிவிப்பும் எதிர்பார்ப்பும்…

வாடிவாசல் படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்தே படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருவதாலும், சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்ததாலும் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகி வந்தது. ஆனால் இடையில் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

வைரல் ஆன டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள்

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த படப்பிடிப்பின் போது சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். டெஸ்ட் ஷூட்டில் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக இருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போது நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. வாடிவாசல் படப்பிடிப்புத் தளத்தில் சூரியின் இந்த திடீர் விசிட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறன் இப்போது இயக்கிவரும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற படைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக இந்த படத்தின் மூலம் இளையராஜாவோடு சேர்ந்துள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இந்த படத்தை முடித்ததும் வாடிவாசலை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம.. பட ரிலீஸை ஒட்டி RRR குழுவினர் போன புனித ஸ்தலம் எது தெரியுமா..? வைரல் ஃபோட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

Actor soori visited vaadivaasal test shoot viral pic

People looking for online information on Soori, Suriya, Vaadivaasal, Vaadivaasal test shoot, Vetrimaaran will find this news story useful.