ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று கடைசி பந்துவரை பரபரப்பாக சென்றது.
Also Read | KGF 2: ”இப்படி ஒரு படமா… இந்திய சினிமாவ வேற…” புஷ்பா ஹீரோ போட்ட வைரல் Tweet!
முன்னாள் சாம்பியன்கள் மோதிய போட்டி…
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது, மும்பை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ஓரளவுக்கு ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக, திலக் வர்மா 51 ரன்கள் எடுத்து, அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவி இருந்தார்.
சரிவும் எழுச்சியும்…
எளிய இலக்கை துரத்திய சென்னை அணியும் ஆரம்பத்தில் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால், மும்பையின் கை ஓங்கியது. மற்ற வீரர்கள் அவுட்டாகி கொண்டிருக்க, 19 ஆவது ஓவரில் பிரெட்டோரியஸ் மற்றும் தோனி ஆகியோர் களத்தில் இருந்தனர். இதன் பிறகு, கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை உனத்கட் வீச, முதல் பந்தில் பிரெட்டோரியஸ் அவுட் ஆனார். தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த பிராவோ, சிங்கிள் எடுக்க கடைசி நான்கு பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங் பக்கம் தோனி இருக்க, சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.
புல்லரித்த ரசிகர்கள்…
தோனி முன்பு மாதிரி பேட்டிங் ஆடவில்லை, பினிஷிங் செய்வதில்லை என்ற விமர்சனங்களுக்கு நேற்றைய போட்டி பதிலாக அமைந்தது. இதையடுத்து ரசிகர்கள் தோனியைக் கொண்டாடும் விதமாக சமூகவலைதளங்களில் மீம்ஸ்களை உருவாக்கியும், கருத்துகளை பகிர்ந்தும் வருகின்றன.
துள்ளிக் குதித்த சூரி…
இந்நிலையில் தற்போது இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து தோனியின் பினிஷிங்குக்குப் பிறகு துள்ளிக் குதித்து கொண்டாடிய காட்சியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் “நம்ம தல நம்ம தலதான்” எனவும் தோனியைப் புகழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8