''எனக்கு வருத்தமாக இருக்கு, இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது'' - சூரி உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

அதன் ஒரு பகுதியாக நடிகர் சூரி சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்.

இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான்.

'தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையை சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால் ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன்.

நமது உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Soori emotional speech about people who affected by Coronavirus | கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து சூரி உருக்கமான பேச்சு

People looking for online information on Coronavirus, Lockdown, Soori will find this news story useful.