நடிகர் ஹரி வைரவன் மரணம்.. இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் சூரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு.

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன்.  இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.


சில மாதங்களுக்கு முன் 15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் மெல்ல அதில் இருந்து மீண்டார்.  அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்ததால் கை, கால் வீங்கியது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார்.

மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் ட்விட்டை பதிவு செய்துள்ளார். அதில், "இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தார் க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி" என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Soori Condolences Tweet for Hari Vairavan Demise

People looking for online information on Hari vairavan, Madurai, Soori will find this news story useful.