“பெத்தவுகளுக்குக் கூட அடிக்க உரிமையில்ல… ஆனா போலீசுக்கு…” நடிகர் சூரியின் சல்யூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபு மற்றும் லால் நடிப்பில் நேரடி ஓடிடி வெளியீடாக வந்துள்ள டாணாகாரன் திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | KGF 2 படத்தின் எடிட்டர் இந்த 19 வயசு பையனா? வெளிவந்த ஆச்சர்ய தகவல்

திரும்பிப் பார்க்க வைத்த டாணாகாரன்…

விக்ரம் பிரபு நடிப்பில் உருவான டாணாகாரன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 8 (நாளை) ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் விக்ரம் பிரபுவோடு லால், போஸ் வெங்கட், எம் எஸ் பாஸ்கர், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள தமிழ் அரசன் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடிகராகவும் தமிழ் அரசன் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடீயோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறையினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ரஜினி பாராட்டு….

இந்த படம் வெளியானதில் இருந்து பரவலாக கவனம் பெற்று பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் நாயகன் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி இருந்தார். அதுபற்றி பகிர்ந்திருந்த விக்ரம் பிரபு ”சூப்பர் ஸ்டார் டாணாகாரன் படத்துக்காக என்னை பாராட்டியது நான் கனவில் கூட நினைக்காத சாதனை. நம் கனவுகளுக்கான முயற்சியில் நாம் இறங்கும்போது இப்படியான அற்புதங்கள் நடக்கும்” என நெகிழ்ச்சியாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சூரியின் சல்யூட்…

இந்நிலையில் இந்த படத்தை பற்றி விக்ரம் பிரபுவோடு பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ள சூரி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமையில்ல ஆனா போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு!பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறந்த படைப்பு” எனக் கூறியுள்ளார். இந்த பதிவு இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சூரி நடிக்கும் விடுதலைப் படமும் இதே போன்ற கதைக்களத்தைக் கொண்ட படமாகவே உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | ராம்கோபால் வர்மாவின் அடுத்த சம்பவம் ’தகனம்’ …. விஜய் பட நடிகையின் கவனம் ஈர்க்கும் தொடர்…

தொடர்புடைய இணைப்புகள்

Actor soori applauded vikram prabhu taanakkaaran

People looking for online information on டாணாகாரன், லால், விக்ரம் பிரபு, Rajinikanth, Soori, Taanakkaaran, Taanakkaaran Movie, Vikram Prabhu, Vikram Prabhu Movie will find this news story useful.