கமல்ஹாசனோடு இணைந்த சிவகார்த்திகேயன்! வெளியான தெறி மாஸ் புதிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சிவகார்த்திக்கேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

டான் படத்தை தொடர்ந்து, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022 ஜனவரி மாதத்தில் 18 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார், இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து கமல் ஹாசன் டிவிட்டரில் "சில வேலைகள்  சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி & RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor sivakarthikeyan kamal haasan joined for new film

People looking for online information on Bigg boss, Bigg Boss Tamil, Biggboss, Doctor, Don, Kamal Haasan, KH, RKFI, Siva Karthikeyan, SK, SK20, SK21 will find this news story useful.