நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ் நிறுவனமே இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022 ஜனவரி மாதத்தில் 18 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் இசை இயக்குனர் தமன் டிவிட்டரில் டிவீட் செய்து ''உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை சூரி, சதீஷ் ஆகியோரிடம் இணைந்து படங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக தெலுங்கு - தமிழில் உருவாகும் இந்த படத்தில் பிரேம்ஜியுடன் நடிக்க இருப்பது கோடம்பாக்கம் வட்டாரங்களில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. கடைசியாக பிரேம்ஜி அமரன் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.
'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 'டான்' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், Single Song சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.