புற்றுநோயுடன் போராடிய நடிகர் தவசி.. விவரம் அறிந்த சிவகார்த்திகேயன் செய்த உதவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு உதவி செய்துள்ளார். 

அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தவசி. இவரின் முரட்டுத்தனமான தோற்றமும், நகைச்சுவையான பேச்சும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் சொல்லும், கருப்பன் குசும்பம் என்கிற வசனம் மீம் மெட்டிரியலாக மாறியது. 

இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தவசியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருந்த அவரின் தோற்றம் இணையத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரின் சிகிச்சைக்கும் போதிய பணமின்றி அவர் கஷ்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு மருத்துவ மற்றும் பொருளாதார உதவிகள் அளிப்பதாக பலர் முன்வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தரப்பில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் பண உதவியை, நடிகர் தவசிக்கு வழங்கியுள்ளார். 

தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் மூலம், அவர் இந்த உதவியை நேரடியாக நடிகர் தவசிக்கும் வழங்கியுள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் உதவிக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

 

புற்றுநோயுடன் போராடிய நடிகர் தவசி.. விவரம் அறிந்த சிவகார்த்திகேயன் செய்த உதவி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் உதவி | Actor sivakarthikeyan helps actor thavasi being hospitalised

People looking for online information on Sivakarthikeyan, Thavasi, Varuthapadatha Valibar Sangam will find this news story useful.