நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு வைத்த பெயர்! நெகிழ்ச்சியான வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திக்கேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். தனது திரை வாழ்க்கையை மிமிக்ரி கலைஞராக, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடங்கியவர். 

சினிமாவில் மெரினா, 3, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் மற்றும் ரஜினிமுருகன், மான் கராத்தே, ரெமோ, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களின் தொடர் வெற்றியின் மூலம் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர்.

இவர் நடித்து தற்போது டாக்டர், டான், அயலான் போன்ற படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த ஜூலை 12-ஆம் நாளில், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திக்கேயன், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊"  இவ்வாறு தெரிவித்தார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor sivakarthikeyan baby Kutty SK is named as

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.