கமல், விஜய், விக்ரம் வரிசையில் சிம்பு! மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் கிடைத்த கௌரவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய 'வேல்ஸ் பல்கலைக்கழகம்.

actor Silambarasan TR with an honorary doctorate
Advertising
>
Advertising

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.

 actor Silambarasan TR with an honorary doctorate

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி' கவுரவ டாக்டர் ' பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது. இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் கொண்டு தரமான கல்வியை வழங்கிவரும் 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இது போல் 'கவுரவ டாக்டர்' பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் கூறியதாவது...

" மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.

விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.நடிப்பு,இயக்கம்,இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார்.

ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது தந்தையின் வழித் தொடர்ச்சியாக தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.அதன் மூலம் திறமையான படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பெரிய வழிகாட்டியாக இருக்கிறார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Silambarasan TR with an honorary doctorate

People looking for online information on சிம்பு, சிலம்பரசன், Silambarasan TR, Simbhu, Str, Vels will find this news story useful.