2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.
இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளுக்குள் ரசிகர்கள் வந்து படம் பார்க்க கொரோணா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகாது என சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். டிவிட்டரில் இது குறித்து டிவீட் செய்துள்ளார், அதில் "நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்" என கூறியுள்ளார்.